ரஜினி கட்சி தொடங்கினால் காங்கிரசுக்கு எதிர்காலம் கிடையாது: பொன்.ராதாகிருஷ்ணன்

  Newstm Desk   | Last Modified : 22 Oct, 2019 10:35 pm
congress-has-no-future-if-rajinikanth-starts-party

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் காங்கிரசுக்கு எதிர்காலம் என்பது கிடையாது என்று மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ரஜினி கட்சி தொடங்கினாலோ, பாஜகவில் சேர்ந்தாலோ நன்மையில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது குறித்து மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும் காங்கிரசுக்கு எதிர்காலம் என்பது கிடையாது. ரஜினி கட்சி தொடங்குவது குறித்த கே.எஸ்.அழகிரியின் கருத்தை பயனற்றதாக கருதுகிறேன்’ என்று பதிலளித்தார்.

மேலும், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close