புதிய மருத்துவக் கல்லூரிகள்: பிரதமருக்கு நன்றி தெரிவித்த முதலமைச்சர் 

  Newstm Desk   | Last Modified : 23 Oct, 2019 08:19 pm
new-medical-colleges-chief-minister-thanked-the-prime-minister

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்த பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வரலாற்று சாதனையாக 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

6 புதிய மருத்துவ கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close