இடைத்தேர்தல்: காமராஜ் நகரில் காங்., வெற்றி

  அனிதா   | Last Modified : 24 Oct, 2019 03:46 pm
by-election-johnkumar-wins

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

புதுச்சேரி காமராஜ் நகர சட்டப்பேரவை  தொகுதியில் கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்.ஆர் காங்கிரஸ் சார்பில் புவனேஸ்வரன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இன்று இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜான்குமார் என்.ஆர் காங்கிரஸின் புவனேஸ்வரனை விட 7,170 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். மொத்த வாக்குகளில், காங்கிரஸ் 14,782 வாக்குகளும், என்.ஆர்.சி 7,162 வாக்குகளும், நாம்தமிழர் கட்சி 620 வாக்குகளும் பெற்றன. 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close