விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் நிலவரம்!

  அனிதா   | Last Modified : 24 Oct, 2019 03:08 pm
vikravandi-nankuneri-by-election

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்கு நேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 2 தொகுதிகளிலும் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 

3 மணி நிலவரம்:

விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

அதிமுக கட்சி சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்செல்வன் 1,09,359 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட புகழேந்தி 66,184 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 2,826 வாக்குகளும் பெற்றனர். 

நாங்குநேரி: 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி

நாங்குநேரி தொகுதியில், அதிமுக கட்சி வேட்பாளர் நாராயணன் 94,562 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபி மனோகர் 62,229 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 2,662 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

1 மணி நிலவரம்: 

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக 1,03,697 வாக்குகளும், திமுக 63,150 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2,712 வாக்குகளும் பெற்றுள்ளன. நாங்குநேரி தொகுதியில், அதிமுக 55.470 வாக்குகளும், காங்கிரஸ்38,919 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 1,124 வாக்குகளும் பெற்றுள்ளன. 

12 மணி நிலவரம்,

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக 69,829 வாக்குகளும், திமுக 42,849 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 1,789 வாக்குகளும் பெற்றுள்ளன. நாங்குநேரி தொகுதியில், அதிமுக 28,974 வாக்குகளும், காங்கிரஸ்18,601 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி 578 வாக்குகளும் பெற்றுள்ளன. 

10 மணி நிலவரம்:

விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக 5312 வாக்குகளும், திமுக 3,265 வாக்குகளும் பெற்றுள்ளன. இதேபோல் நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்று முடிவில், அதிமுக 4,407 தொகுதிகளும்,  காங் 2,275 வாக்குகளும் பெற்றுள்ளன. 

Newstm.in 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close