டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை வெளியிட கோரி உச்சநீதிமன்றத்திடம் மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கோரியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதியில் இருந்து நான்கு வாரம் அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி இறுதி முடிவு எதுவும் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு வாக்கு இயந்திரங்கள் வழங்குவது பற்றி தேர்தல் ஆணையம் இறுதி தகவல் தரவில்லை’ என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அதில் குறிப்பிடட்டுள்ளது.
newstm.in