திருவள்ளுவர் இந்து என்பதற்கான ஆதாரம் இல்லை: அமைச்சர்  பாண்டியராஜன் 

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 06:43 pm
there-is-no-proof-that-thiruvalluvar-is-hindu-minister-pandiyarajan

திருவள்ளுவர் இந்து துறவி என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும், திருவள்ளுவர் உருவ படத்துக்கு காவி உடை, சிலுவை அணிவித்து படம் வெளியிட்டாலும் சம்மதம்தான் என்றும் மதுரையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் பேட்டியளித்துள்ளார்.

மேலும், ‘ஹரப்பா, மொஹஞ்சதாரோவை போல் கீழடி, ஆதிச்சநல்லூர் பற்றி உலகம் பேசப் போகிறது. பாடப்புத்தகங்களில் கீழடி அகழாய்வு குறித்த முடிவுகள் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை சார்பாக 4 அடுக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என்றும் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close