திருவள்ளுவர் சிலையை திமுககாரர்களே கொச்சைப்படுத்தியிருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் 

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2019 10:02 pm
thiruvalluvar-statue-must-have-been-dehumanized-by-dmk-e-pon-radhakrishan

திருவள்ளுவர் சிலையை திமுக அல்லது திகவை சேர்ந்தவர்களே கொச்சைப்படுத்தியிருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும்,  ‘திருவள்ளுவர் மீது இருந்த திருநீரை அழிக்க திமுகவிற்கு யார் அதிகாரம் கொடுத்தது?.  அவர் ஏற்கனவே திருநீரோடு இருந்தவர்தான். திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூச வேண்டிய தேவை பாஜகவிற்கு இல்லை. திருவள்ளுவரை முழுக்க முழுக்க கொச்சைப்படுத்தியது திமுகதான். அமர்ந்த கோலத்தில் இருந்த வள்ளுவரை நின்ற கோலத்தில் சிலை வைத்து அவமானப்படுத்தியது திமுக’ என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close