தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சி: அமைச்சர் பாண்டியராஜன்

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 08:13 pm
attempt-to-take-action-on-national-security-act-minister-pandiyarajan

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் கைது செய்யப்பட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்படும் என்று, சென்னை ஆவடியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘அண்ணா உருவாக்கிய திமுக தற்போது வாரிசு அரசியலை நியாயப்படுத்தி பேசும் இடத்தில் உள்ளது. காங்கிரஸ் வருத்தப்படும் என்பதற்காக திமுக ஆட்சியில் தமிழ்நாடு தினம் கொண்டாடப்படாமல் இருந்தது. அதிமுகவை தாக்கி பேசுவதை விடுத்து தேர்தல் தோல்வி குறித்து திமுக சிந்திக்க வேண்டும்’ என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close