பேனர்கள், கொடிகள் வைக்க வேண்டாம்: கமல்ஹாசன் வேண்டுகோள் 

  Newstm Desk   | Last Modified : 05 Nov, 2019 10:31 pm
do-not-put-banners-and-flags-kamal-haasan-pleads

தனது பிறந்தநாளை முன்னிட்டு பேனர்கள், கொடிகள் எதுவும் வைக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என்றும், பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் பேனர், கொடிகள் வைப்பதை தவிர்க்குமாறும்  கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எவ்வித காரணங்களும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது;சமரசங்கள் செய்து கொள்ளப்படமாட்டாது என்ற கமல்ஹாசன், நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் ம.நீ.ம கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close