புகைப்படம், பட்டாசு, பட்டம் தவிர்ப்பீர்: உதயநிதி ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 07 Nov, 2019 10:49 pm
photography-fireworks-to-avoid-udayanidhi-stalin

புகைப்படம், பட்டாசு மற்றும் பட்டத்தை தவிர்த்திடுங்கள் என்று திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின், ‘ நான் சம்பந்தப்படாத, பங்கேற்காத நிகழ்ச்சி பற்றிய சுவரொட்டி, அழைப்பிதழில் என் படத்தை பயன்படுத்தாதீர்கள். பெரியார், அண்ணா, கருணாநிதி, க.அன்பழகன் போன்ற நம் முன்னோடிகளின் படங்களே இடம்பெற வேண்டும். ஐந்தாம் கலைஞர், திராவிட கலைஞர் போன்ற பட்டப் பெயர்களை எந்த வகையில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. உங்களில் ஒருவனாக, உங்களின் மனதுக்கு நெருக்கமான உதயநிதியாகவே இருக்க விரும்புகிறேன். என் நிகழ்ச்சிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்த்து அந்த பணத்தை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து உதவுங்கள்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close