தமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது - முதலமைச்சர் எதிர்கேள்வி!!

  அபிநயா   | Last Modified : 08 Nov, 2019 08:44 pm
tamilnadu-government-is-doing-good-in-every-field-cm-pazhanisamy

தமிழகத்தில் ஆளுமையான தெளிவான தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் எங்கே வெற்றிடம் உள்ளது என்று கேள்வியெழுப்பிய முதலமைச்சர் பழனிசாமி, தலைமைகள் அனைத்தும் சரியாகவும் தெளிவாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.

சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு நிச்சயம் வெற்றிடம் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து, விக்கிரமபாண்டி தொகுதியில் அதிமுக நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தற்போது உரையாற்றி வரும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, தமிழக அரசியலில் வெற்றிடமே இல்லை என்பதை இடைத்தேர்தலின் வெற்றி காட்டியுள்ளதாக கூறினார்.

போக்குவரத்துத்துறை, சமூக நலத்துறை என பல துறைகளிலும் விருது பெற்று வருகிறது தமிழக அரசு என்று கூறிய அவர், ஓர் நல்ல தலைமை இல்லாமல் இந்த வெற்றிகள் சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், அதிமுக கூட்டணி மிகவும் பலம் பொருந்திய கூட்டணி எனவும், அதனை நெருங்க எந்த அரசியல் கட்சியாலும் முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

Newstm.in

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close