அயோத்தி  தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: முதலமைச்சர் வேண்டுகோள்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 09:20 am
all-should-respect-ayodhya-verdict-chief-minister-s-request

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில்,  ‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் தீர்ப்பை அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும். எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கும் தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது. சாதி, மத பூசல் இன்றி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ செய்யுங்கள். இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close