5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2019 03:39 pm
5-laksh-to-provide-scholarships-for-the-elderly

தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் பெறபட்ட மனுக்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் நலத்திட்டம் வழங்கும் விழா சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தில் இன்று நடைபெற்றது. அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரூபாய் 15 கோடி மதிப்பிலான நலதிட்டங்களை வழங்கி, கட்டுமான பணிகளை திறந்து வைத்தார்

விழாவின் போது சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழகம் முழுவதும் அனைத்து சட்ட மன்ற தொகுதிகளிலும் 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு , 5 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது, நிராகரிக்கபட்ட மனுக்களையும் மறு ஆய்வு செய்து மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது

தமிழகம் முழுவதும் 5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. பல மனுக்கள் 50 ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்பு இல்லாத காரணத்தினால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது, முதியோர் நலன் கருதியும், கால சூழலை கருதியும்  ஒரு லட்சம் வரை தொத்து மதிப்பீடு உள்ளவர்களுக்கும் முதியோர் உதவித்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும், ‘அதிகாரிகள், அரசு ஊழியர்பளின் சிறந்த பணியின் காரணமாக தமிழகம் ஐந்து தேதிய விருதுகளை பெற்றுள்ளது. நீர் மேலான்மை திட்டத்தை துவக்கி மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை நிறப்பி மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேரும் உபரி நீரை நீரேற்று திட்டம் மூலம் 100 ஏரிகளை நிறப்பும் திட்டம் ஒரு மாதத்தில் துவங்கி ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.

அதேபோல சேலம் கருர் வரை உள்ள ஏரிகளையும் உபரி நீரை கொண்டு நிறப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கனவு திட்டமான கோதாவரி காவேரி திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதேபோல காவேரி குண்டாறு இணைப்பு திட்டத்தை இணைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விருதுநகர், தேனி, புதுகோட்டை சிவகங்களை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்கள் நீர் மேலான்மை மூலமாக வளம் பெறும் என்று உறுதியளித்தாளர்.  இந்த புதிய திட்டம் ஜீலைக்குள் துவக்கிவைக்கப்படும்’ என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close