கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2019 11:32 am
the-dmk-is-emphasizing-the-federal-system-stalin

கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது என்று, பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், கருணாநிதிக்கு சிறப்பான அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்பின் பொதுக்குழுவில் பேசிய ஸ்டாலின், ‘இந்திய அரசியல் சட்டம் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்கு வாழ்த்துகள். அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க திமுக ஒப்புக்கொள்ளாது. கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது. 1974இல் பேரவையில் பேசிய கருணாநிதி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியை முன்வைத்தனர். மாநில சுயாட்சி தொடர்பாக ராசமன்னார் குழு பரிந்துரையை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும். மாநில அரசின் சில அதிகாரங்களை மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது’ என்று அவர் பேசினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close