திமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள் 

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2019 04:36 pm
dmk-competition-optional-payment-details

உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்பமனு கட்டண விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.50,000, மாநகராட்சி உறுப்பினர் - ரூ.10,000, நகராட்சி தலைவர் ரூ.25,000, நகராட்சி உறுப்பினர் ரூ.5,000 கட்டணம் என்று திமுக அறிவித்துள்ளது.

பேரூராட்சி தலைவர் - ரூ.10,000, பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவி விருப்ப மனுவுக்கு ரூ.2,500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.10,000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ரூ.5,000 கட்டணம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஆதிதிராவிடர், பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிடுவோர் பாதித்தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் திமுக அறிவித்துள்ளது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close