உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவோரிடம் நவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்பமனு பெறப்படும் என்றும், விருப்பமனுவை கட்சியின் www.bjptn.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழக பாஜக அறிவித்துள்ளது.
விருப்பமனு கட்டண விவரங்கள்
மாநகராட்சி மேயர் - ரூ.10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.2,500, நகராட்சி தலைவர் - ரூ.5,000, நகராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.1,000, பேரூராட்சி தலைவர் - ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் - ரூ.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - ரூ.2,500, ஒன்றிய குழு உறுப்பினர் - ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
newstm.in