உலகத் தரத்திற்கேற்ப சாலைகள்: முதலமைச்சர் பழனிசாமி

  Newstm Desk   | Last Modified : 13 Nov, 2019 08:25 pm
world-class-roads-chief-minister-palanisamy

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது. போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மக்கள் எளிதாக பாண்டிபஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

முன்னதாக, சாலைகளில் பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் பார்வையிட்டார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் ரூ.39. 86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த இலவச வை-ஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close