அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை: மு.க.அழகிரி

  அனிதா   | Last Modified : 14 Nov, 2019 12:38 pm
rajini-s-statement-that-there-is-a-political-vacuum-is-true-azhagiri

தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மு.க.அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அரசியல் குறித்து பேட்டியளிக்க ஆர்வம் காட்டாத மு.க.அழகிரி இன்று சென்னை விமானநிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினி கூறியது உண்மை என்றும், அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் இணைவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தற்போது எதுவும் கூற முடியாது என அவர் பதிலளித்துள்ளார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close