இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 04:30 pm
minister-rajendra-balaji-speech-about-sabarimala-case

இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

சபரி மலை வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "வீம்புக்காக சபரிமலை செல்லக்கூடாது என்றும் வீம்புக்காக செல்வேன் என்பது பிரச்சனைக்கு வழிவகுக்குமே தவிர முடிவுக்கு வராது என்றும் தெரிவித்தார். அழகிரி, ரஜினி கருத்துக்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. தேர்தலில் பார்த்துக்கொள்வோம் என தெரிவித்த அவர், நடிகர்கள் கட்சி தொடங்கலாம், ஆனால் மக்களிடம் நடிக்கக்கூடாது என கூறினார். மேலும், இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுவதை அரசியல் தலைவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

Newstm.in 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close