வெற்றிடம் உள்ளது: ரஜினியின் கருத்துக்கு கமல் ஆதரவு 

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2019 06:50 pm
there-is-a-vacuum-kamal-supports-rajini-s-comment

தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில் நல்ல தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை வழிமொழிகிறேன்.வழிமொழிவதை தவிர வேறு வழி இல்லை.  ஊராட்சிக்கும், மாநகராட்சிக்கும் உள்ள வித்தியாசம் எங்களுக்கு தெரியும். நல்ல ஆளுமைக்கு கண்டிப்பாக வெற்றிடம் உள்ளது. முதலமைச்சர் என்னை குறித்து பேசியது அவரது கருத்து’ என்றார்.

மேலும், நாடு முழுவதும் மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றும், தற்கொலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close