அதிமுக வசதிபடைத்தவர்களின் கட்சி என்றும் அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ரூ.50 ஆயிரம் வாங்கும் திமுக மிகப்பெரிய கோடீஸ்வர கட்சி என்றும், அதிமுக ஏழைகளின் கட்சி என்றும் தெரிவித்தார். மேலும், 2011 முதல் நாங்கள் தான் ஆட்சியில் உள்ளோம் என்றும் எங்களின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சாதி, மத கலவரங்கள் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக திகழந்து வருவதாகவும் கூறிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.
Newstm.in