டாஸ்மாக்கில் காட்டும் அக்கறையை தமிழக அரசு விவசாயிகள் மீது காட்டவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் ஆதரவு எனவும் தெரிவித்தார். ஆளும் கட்சியான அதிமுக உள்ளாட்சி தேர்தலிலும் சதி செய்து வெற்றி பெறும் நோக்கில் செயல்படுவதாகவும், டாஸ்மாக்கில் காட்டும் அக்கறையை விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Newstm.in