புதிய மாவட்டத்துக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை: அமைச்சர் விளக்கம்

  அனிதா   | Last Modified : 16 Nov, 2019 02:01 pm
no-relation-to-new-district-and-local-elections-minister-s-explanation

புதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் பதிக்காது என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கமளித்துள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 'புதிய மாவட்டத்துக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை என்றும், புதிய மாவட்டங்கள் தோற்றுவிப்பால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் பதிக்காது எனவும் தெரிவித்தார். புதிதாக மறுவரையறுக்கப்பட்டு 2018ல் வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்றும், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் மாற்றம் தேவைப்படின் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே மேற்கொள்ளப்படும் என்றும் விளக்கமளித்தார். மேலும்,  அரசை குறைகூறும் நோக்கில் ஸ்டாலின் சந்தேகத்தை எழுப்பியது வருந்தத்தக்கது என கூறிய அமைச்சர், விரைவில் மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close