தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 18 Nov, 2019 10:01 pm
thala-ajith-should-not-enter-politics-minister-rajendra-balaji

ரஜினி, கமல், விஜய்தான் அரசியலுக்கு வர வேண்டுமா? எங்கள் தல அஜித் வரக்கூடாதா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகரில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், அதிமுகவிற்கு விஸ்வாசமாக உள்ள நட்சத்திரங்களை கூட நாங்கள் களமிறக்குவோம். நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என ரஜினி கூறியதில் எந்த தவறும் இல்லை; நாளை எதுவும் நடக்கலாம். ரஜினி ஆன்மிகவாதி என்பதால் நாளை எதுவும் நடக்கலாம் என ஆன்மிக கோணத்தில் கூறியுள்ளார். பாட்ஷா திரைப்படத்தின்போதே ரஜினி அரசியலுக்கு வந்திருக்க வேண்டும்; காலம் தாழ்த்திவிட்டார்’என்றார்.

மேலும், அதிமுக ஜெயிப்பதற்காக எந்தவித சித்து விளையாட்டுகளும் செய்வோம் என பேசியது உண்மைதான் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close