இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ இரட்டை வேடம்: அமைச்சர் ஜெயக்குமார் 

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2019 02:27 pm
vaiko-dual-role-in-sri-lankan-tamil-issue-minister-jayakumar

இலங்கை தமிழர் விவகாரத்தில் வைகோ உள்ளிட்டோர் இரட்டை வேடம் போடுகின்றனர் என்றும், இலங்கை தமிழர் நலனை பாதுகாப்பதில் அதிமுக அரசு முனைப்பாக செயல்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘ரஜினி, கமல், விஜய் என யாராக இருந்தாலும் அரியணை ஆசை இருக்கும். சிறப்பாக நடைபெறும் அரசை விமர்சிக்கக்கூடாது. அதிமுக மீது கல்லெறிந்தால் அது அவர்கள் மீதே விழும். அதிமுக அரசையும், ஆட்சியையும் விமர்சித்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். தமிழகத்தில் எந்த அதிசயமும் நடக்கப்போவதில்லை. மக்களுக்கு நல்லது செய்த பின்னர் பதவிக்கு வர வேண்டும். அடுத்தவர்கள் மீது கல்லெறிந்து பதவிக்கு வரக்கூடாது’ என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close