டாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கும் அரசு உரம் கையிருப்புக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை: முத்தரசன்

  அனிதா   | Last Modified : 20 Nov, 2019 11:32 am
mutharasan-criticism-about-fertilizer-shortage

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கும் அரசு, உரம் கையிருப்புக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். 

கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இணைவதை விட இருவரும் திரைப்படத்தில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்தார். மத்திய அரசு பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவது கண்டிக்கத்தக்கது என கூறிய அவர், இந்த செயல் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைத்து விடும் என்றும், உள்ளாட்சி மன்றத் தேர்தலை மறைமுகமாக நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், தீபாவளி பண்டிகையின்போது டாஸ்மாக் விற்பனை குறித்து இலக்கு நிர்ணயித்த தமிழக அரசு உரம் கையிருப்பு குறித்து இலக்கு நிர்ணயிக்க தவறிவிட்டது என்றும், உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முத்தரசன் வலியுறுத்தினார். 

Newstm.in 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close