அஜித் கண்ணியமான நடிகர்: அதிமுக அமைச்சர் புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2019 02:13 pm
ajith-is-an-honorable-actor-minister-jeyakumar

அஜித் கண்ணியமான நடிகர்; தொழில் பக்தி மிக்கவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை சாந்தோமில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியில், ‘ரஜினி, கமல், விஜய் ஆகியோரின் அரசியல் கானல் நீர் போன்றது; மாய பிம்பங்கள். 3 பேரையும் நம்பி பின்னால் செல்பவர்கள் ஏமாந்து போவார்கள். அஜித் கண்ணியமான நடிகர்; தொழில் பக்தி மிக்கவர். கூட்டம் கூட்டமாக வந்தாலும் சரி, ஒத்தையாக வந்தாலும் சரி அதிமுக வெற்றி பெறும். மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என வெளியான தகவல் கற்பனையே’ என்றார். 

2021 தேர்தலில் பாஜக தலைமையில் கூட்டணி என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என பியூஸ் கோயல் குறிப்பிட்டார் என்பதை பொன்.ராதா கிருஷ்ணன் நினைவில் கொள்ள வேண்டும் என்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்றும் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close