கமல் காலில் பொருத்திய கம்பி நாளை அகற்றம்: மநீம

  அனிதா   | Last Modified : 21 Nov, 2019 12:10 pm
kamal-s-leg-wire-is-remove-at-tomorrow

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு விபத்தின் போது பொருத்துப்பட்ட டைட்டேனியம் கம்பி நாளை அகற்றப்படவுள்ளது. 

பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கடந்த 2016 ஆண்டு நிகழ்ந்த விபத்தின் போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, காலில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரி செய்ய டைட்டேனியம் கம்பி பொருத்தப்பட்டது. இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு கமல்ஹாசன் காலில் பொருத்தப்பட்ட டைட்டேனியம் கம்பியை நாளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படவுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குபிறகு கட்சியினரை கமல் சந்திப்பார் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close