2021இல் தமிழக மக்கள் அதிசயத்தை, அற்புதத்தை  நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த் மீண்டும் பரபரப்பு பேட்டி

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2019 04:09 pm
tamilnadu-people-will-perform-miracle-and-miracle-in-2021-rajinikanth

2021ஆம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் அதியசத்தை, அற்புதத்தை 100-க்கு 100%  நிகழ்த்துவார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதை பெற்றபின் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம்; அவர்களுக்கு விருதை சமர்ப்பிக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும், கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்று ரஜினி பதிலளித்தார்.

இதனைத்தொடர்ந்து, திராவிட மண்ணில் ஆன்மிக அரசியல் எடுபடாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, 2021ஆம் ஆண்டு அரசியலில் தமிழக மக்கள் அதியசத்தை, அற்புதத்தை 100-க்கு 100%  நிகழ்த்துவார்கள் என்று ரஜினிகாந்த் நம்பிக்கையுடன் பதில் கொடுத்துள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close