மத்திய அரசு பணிகளில் இடஒதுக்கீடு: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 03:14 pm
reservation-in-central-government-jobs-stalin

மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த மத்திய அரசு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்த இந்த கூட்டத் தொடரிலேயே உரிய அரசியல் சட்டத் திருத்த மசோதா கொண்டு வர வேண்டும். மத்திய அரசு பணி, கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வர வேண்டும்’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close