ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் முயற்சி: அமைச்சர் ஜெயக்குமார்

  முத்து   | Last Modified : 22 Nov, 2019 06:38 pm
stalin-s-attempt-to-form-alliance-with-rajini-and-kamal-minister-jayakumar

ரஜினி, கமலுடன் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார் என்று, டெல்லியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனியார் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அமைச்சரின் பேட்டியில் மேலும், ‘கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே கமல்ஹாசனை ஸ்டாலின் சந்தித்துள்ளார். திமுக, ரஜினி-கமல் இணைந்தால் மொத்தம் 28 சதவீதமே வாக்கு வங்கி கிடைக்கும். யாரும் போட்டியிட விரும்பாததால் உள்ளாட்சித் தேர்தல் விருப்பமனுவுக்கான அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது’ என்றார்.

மேலும், ‘என்னுடைய தனிப்பட்ட முறையில் நடிகர் கமல்ஹாசன் பூரண உடல்நலம் பெற வேண்டும்’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close