மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2019 09:28 pm
teacher-qualification-exam-will-be-held-again-minister-sengottaiyan

2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும், இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

அமைச்சர்கள் யாரும் சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்வதில்லை என ஸ்டாலின் புகாருக்கு பதில் தெரிவித்த அமைச்சர், அமைச்சர்கள் அன்பும், அறனுமாய் நடந்து கொண்டதால் இடைத்தேர்தலில் மக்கள் பெற வைத்தனர். ரஜினி சொன்ன அற்புதம், அதிசயம் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு நடந்துள்ளது’ என்றார்.

மேலும், ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் பாராட்டி கெளரவிக்கப்படும். ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறுவதில் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close