டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் தமிழக பாஜகவிற்கு தலைவர் நியமிக்கப்படுவாரா ??

  அபிநயா   | Last Modified : 23 Nov, 2019 08:40 pm
miracle-happened-in-maharashtra-before-tamilnadu-h-raja

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ஹெச். ராஜா, தமிழகத்தில் நடக்க வேண்டிய அதிசயம், அதற்கு முன்னதாகவே மகாராஷ்டிராவில் நிகழ்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர் இழுபறி நீடித்து வந்ததை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று காலை அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் முன்னிலையில் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவாரும் பதிவியேற்றனர். இதை தொடர்ந்து, அம்மாநில தலைவர்கள் மட்டுமல்லாது அனைத்து மாநில அரசியல் தலைவர்கள் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச். ராஜா அவர்கள், தமிழகத்தில் நடக்க வேண்டிய அதிசயம், மகாராஷ்டிராவில் நிகழ்ந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், வரும் மாதம் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக ஒருவர் நியமிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த இல.கணேசன் அவர்கள், சிவசேனாவின் பதிவி ஆசை பேராசை ஆனதே தற்போதைய சிவசேனாவின் நிலைக்கு காரணம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close