அதிமுக செயற்குழு, பொதுக்குழு  கூட்டம் தொடங்கியது

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 11:08 am
the-aiadmk-executive-committee-and-the-general-committee-have-started

அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் தொடங்கியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடைபெறுகிறது.

செயற்குழு, பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

கஜா புயல் காரணமாக கடந்த ஆண்டு அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் இக்கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close