உட்கட்சி தேர்தலில் போட்டியிட  5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்: அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் 

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2019 12:36 pm
5-years-member-to-contest-internal-party-election-amendment-to-aiadmk-rules

அதிமுக உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில், உட்கட்சி தேர்தலில் போட்டியிடுவோர் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியிட 5 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. மேலும், அதிமுகவில் 56 மாவட்டங்களாக பிரித்து கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை தாக்கல் செய்த பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிதி ரூ.226.0 கோடி நிரந்தர வைப்பு நிதியாக வங்கியில் உள்ளதாகவும், தேர்தல் நிதியாக ரூ.46.70 கோடியும், புதிய உறுப்பினர் சேர்ப்பு மூலம் ரூ.1.9 கோடியும் பெறப்பட்டுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close