அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல்

  Newstm Desk   | Last Modified : 25 Nov, 2019 05:12 pm
central-government-approval-to-postpone-dam-safety-bill

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று அணை பாதுகாப்பு மசோதாவை ஒத்திவைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அணை பாதுகாப்பு மசோதாவை குளிர்காலக் கூட்டத் தொடரில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், டெல்லியில் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார்  ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து அணை பாதுகாப்பு மசோதாவை  நிறைவேற்றக்கூடாது என  கோரிக்கை விடுத்தனர். தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை ஏற்ற மத்திய அமைச்சர், அணை பாதுகாப்பு மசோதாவை குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு கொண்டுவரப்படாது என்றும் தெரிவித்தார்.    

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close