பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: திமுகவை விமர்சித்த செம்மலை

  Newstm Desk   | Last Modified : 28 Nov, 2019 08:23 pm
the-kitten-has-come-out-admk-mla-semmalai-criticizing-dmk

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதாக, உள்ளாட்சி தேர்தலுக்கு எதிரான திமுகவின் மனு குறித்து அதிமுக எம்எல்ஏ செம்மலை விமர்சித்துள்ளார்.

தொகுதி வரையறை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக சேலத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியளித்த அதிமுக எம்எல்ஏ செம்மலை, ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. தேர்தலை நடத்தக்கூடாது என சொல்வதும், தடை செய்ய வேண்டும் என கூறுவதும் ஒன்றுதான். தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகவில்லை என்பதையே இது காட்டுகிறது. தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close