5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்: அமைச்சர் செங்கோட்டையன் 

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 10:14 am
5-8th-class-public-exam-all-will-pass-for-3-years-minister-sengottaiyan

5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தாலும் 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரில் 11ஆம் தேதி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆண்டின் இறுதிலேயே கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவர் தோல்வி அடைந்தால் அடுத்த வகுப்புக்கு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது என்று அந்த அரசிதழில் குறிப்பிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வுக்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழாண்டு முதல் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி தமிழக அரசாணை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த பொதுத்தேர்வு தொடர்பாக ஈரோட்டில் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஏளூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தாலும் 3 ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர். 3 ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்; தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். இந்த பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்படத் தேவை இல்லை’ என்றார். 

மேலும், மாணவர்களின் எதிர்கால நலனை மனதில் கொண்டு சரளமாக ஆங்கிலம் கற்க கையேடு வழங்கப்பட்டுள்ளதாகவும், வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close