அதிமுககாரர்களை பார்த்துதான் வடிவேலு நடிப்பதை நிறுத்திவிட்டார்: டிடிவி தினகரன் கிண்டல் 

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2019 04:22 pm
vadivelu-has-stopped-acting-only-to-see-admk-s-dinakaran

அதிமுககாரர்களின் மேதாவித்தனமான பேச்சை பார்த்து தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பதில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் நக்கலடித்துள்ளார்.

இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன்,’அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தடுமாற்றத்துடன் பேசி வருவது, அமமுகவையும், தினகரனை பார்த்து பயம்தான். அதிமுகவோடு சேர்வதற்கு யார் இப்போது தயாராக இருக்கிறார்கள். எந்த தன்மானம் மிக்கவர்களும் துரோகிகளோடு போய் சேர்வார்களா? என்று தினகரன் கேள்வி எழுப்பினார்.

மேலும், அதிமுககாரர்கள் இம்சை அரசர்கள் மாதிரி. இவங்களின் மேதாவித்தனமான பேச்ச பார்த்து தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பதில்லை என்றும், எழுதிவெச்சு படிக்க தெரியாதவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திருப்பதாகவும் முதலமைச்சரை மறைமுகமாக தினகரன் விமர்சித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close