விரைவில் காலம் கனியும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்றும் பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்ல திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பி.டி.அரசகுமார், ‘எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின். அவர் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதலமைச்சராகியிருக்க முடியும். ஆனால், ஜனநாயக முதல்வராக ஸ்டாலின் காத்திருக்கிறார். காலம் கனியும் காரியங்கள் தானாக நடக்கும்;ஸ்டாலின் அரியணை ஏறுவார்; நாம் அதை பார்ப்போம்’ என்று அவர் பேசியுள்ளார்.
பாஜக மாநில துணைத்தலைவர் பி.டி.அரசகுமார் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளது திமுகவினரையே அசர வைத்துள்ளது.
newstm.in