தினமும் ரூ.225 உதவித்தொகை! அரசின் அடுத்த அதிரடி!

  Ramesh   | Last Modified : 03 Dec, 2019 06:54 pm
government-to-give-225-daily

தமிழகத்தில் தேர்தல் ஜூரத்தால் நலத்திட்ட உதவிகள் நாளுக்கு நாள் குவிந்து வரும் நிலையில், ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றது முதல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஊழல் புகாரை தெரிவிக்க இலவச எண்கள், மதுபான பார்களின் எண்ணிக்கை குறைப்பு,  உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்திவருகிறார்.

 

அந்தவகையில் தற்போது புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிறகு ஓய்வு எடுக்கும் நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 225 ரூபாய் வீதம் மாதத்திற்கு சுமார் 6 ஆயிரம் ரூபாய் வரை வழங்கும் வகையில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து 48 மணி நேரத்திற்கு பிறகு அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் விதமாக இத்திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close