இப்படி செஞ்சா தான் ஸ்டாலின் முதல்வராவார்! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

  அனிதா   | Last Modified : 10 Dec, 2019 01:30 pm
stalin-s-cm-dream-will-not-come-true

தமிழ் நாட்டில் அநேகம் பேருக்கு முதல்வர் கனவு இருக்கிறது. ஆனால்  எல்லாருமே முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விட முடியாது. அதிமுகவை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தின் முதல்வராக இருப்பார்கள்.அதிமுக மட்டுமே ஆட்சியில் இருக்கும். இல்லையெனில், முதல்வராக விரும்பும் ஸ்டாலின், நித்தியானந்தா போல் தனித்தீவு வாங்கி அங்கே தன்னை முதல்வராக அறிவித்து கொள்ளலாம். ஸ்டாலின் மட்டுமல்ல தமிழகத்தில் யார் யாரெல்லாம் முதல்வராக விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் தனி தீவு சொந்தமாக வாங்கி கொண்டு அங்கே அவர்களை முதல்வர்களாக அறிவித்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

அரசியலில் குருமூர்த்தி கத்துக் குட்டி. அவருக்கு அரசியல் குறித்தும் மக்கள் குறித்தும் எதுவும் தெரியாது.  அதிமுகவை விமர்சிப்பதற்கு அவருக்கு தகுதி இல்லை. குடியுரிமை திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்த பின்பே நாங்கள் ஆதரித்து பேசினோம் என்று அமைச்சர் ஜெயக்குமார்  தனது பேட்டியில் அறிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close