ஆட்சியை தக்க வைக்குமா பிஜேபி? இன்று ஓட்டுப்பதிவு!

  அனிதா   | Last Modified : 12 Dec, 2019 07:19 pm
will-bjp-retain-ruling-power

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து, 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி தொடங்கி 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 20 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்தது. 3-வது கட்டமாக 17 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதல் ஆர்வத்துடன் பொதுமக்கள் நிண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

17 தொகுதிகளிலும் 32 பெண்கள் உள்பட 309 பேர் போட்டியிடுகிறார்கள். 56.18 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு அளிக்கிறார்கள். இதற்காக 7016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவ படையினர் உள்ளிட்ட 40,000 க்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

3-வது கட்ட வாக்குப்பதிவுக்காக பிஜேபி சார்பில் பிரதமர் , மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, சத்ருகன் சின்கா ஆகியோரும் பிரசாரம் செய்து உள்ளார்கள்.
ஜார்க்கண்டில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை கைப்பற்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் கடுமையாக போராடி வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close