மாவட்ட கவுன்சிலர் முழு பட்டியல் வெளியானது ! திமுக, அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள் லிஸ்ட் !

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 08:33 am
tamil-nadu-local-body-election-position

மாவட்ட வாரியாக அதிமுக, திமுக மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் பிடித்துள்ள இடங்கள் குறித்த முழு பட்டியல் இதோ. தஞ்சையில் மட்டும் ஒரு மாவட்ட கவுன்சிலர் இடத்திற்கு முடிவு இன்னும் வெளியாகவில்லை.

ஈரோடு
ஈரோட்டில் உள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரியில் உள்ள 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களை அதிமுக கைப்பற்றியுள்ளது.
திமுக 5 இடங்களில் வெற்றி.

கரூர்
கரூரில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை அதிமுகவும், 3 இடங்களை திமுகவும் வென்றுள்ளது.

கோவை
கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 4 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

சேலம்
சேலத்தில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 15 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றி.

தருமபுரி
தருமபுரியில் மொத்தம் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை அதிமுக கைப்பற்றியது. 4 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக வெற்றி.

தேனி
தேனியில் உள்ள 10 இடங்களில் 8 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை அதிமுகவும், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுகவும் கைப்பற்றியது.

அரியலூர்
அரியலூரில் உள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை அதிமுகவும், 1 இடத்தை திமுகவும் கைப்பற்றியுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் உள்ள 17 இடங்களில் 12 இடங்களை அதிமுக கைப்பற்றியது. 5 இடங்களில் திமுக வெற்றி.

திருச்சி
திருச்சியில் 19 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. 5 இடங்களில் அதிமுக வெற்றி.

சிவகங்கை
சிவகங்கையில் உள்ள 16 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை திமுக கைப்பற்றியது. 7 இடங்களில் அதிமுக வெற்றி

திண்டுக்கல்
மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 16 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 7 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள 8 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 7 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் மட்டும் அதிமுக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

மதுரை
மதுரையில் உள்ள 23 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 12 இடங்களை கைப்பற்றியுள்ளது. 10 இடங்களில் அதிமுகவும், ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

நீலகிரி
நீலகிரியில் உள்ள 6 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் ஐந்து இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து நீலகிரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது திமுக.

நாகை
நாகையில் உள்ள 21 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 18 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி. மொத்தமுள்ள 24 இடங்களில் திமுக, அதிமுகவைத் தொடர்ந்து பாமக 1 இடத்திலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி.

கடலூர்
கடலூரில் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 15 இடங்களை திமுகவும், 14 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது.

கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் உள்ள 23 இடங்களில் 15 இடங்களை திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 8 இடங்களில் அதிமுக வெற்றி.

தஞ்சை
தஞ்சையில் உள்ள 28 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 23 இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. 5 இடங்களில் அதிமுக வெற்றி.

திருப்பூர்
திருப்பூரில் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13-ஐ அதிமுக கூட்டணி கைப்பற்றியது. 4 இடங்களில் திமுக வெற்றி

திருவண்ணாமலை
25 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் அதிமுக வெற்றி.

விருதுநகர்
விருதுநகரில் உள்ள 20 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 13 இடங்களிலும், திமுக கூட்டணி 7 இடங்களிலும் வெற்றி

ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை திமுக கைப்பற்றியது. மீதமுள்ள 5 இடங்களில் அதிமுக வெற்றி.

திருவாரூர்
18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை திமுகவும், 3 இடங்களை அதிமுகவும் வென்றுள்ளது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உள்ள 22 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியுள்ளது.

நாமக்கல்
நாமக்கல் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 13 இடங்களில் அதிமுகவும், 4 இடங்களில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close