சபாநாயகருக்கான அதிகாரம் என்ன..? வானளாவிய அதிகாரத்துடன் செயல்பட்ட பி.எச்.பாண்டியன்

  முத்து   | Last Modified : 04 Jan, 2020 09:15 pm
former-speaker-of-the-aiadmk-is-ph-pandian-passed

முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மற்றும் அதிமுகவின் மூத்த தலைவரான பி.எஸ் பாண்டியன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் பிறந்தவர். இவர் 1980 முதல் 85 ஆம் ஆண்டு வரை தமிழக சட்டப்பேரவையின் துணை சபாநாயகராகவும், 1985முதல் 1989 வரை சபாநாயகராகவும் இருந்துள்ளார். இவர் முதல்முறையாக தனது சொந்த தொகுதியான சேரன்மகாதேவியில் 1977ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார். அதன்பின் 1980, 84, 89ஆம் ஆண்டு தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணியில் இருந்து 89 ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார். 1999 திருநெல்வேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்தார். தற்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.  

இவரது மகன் மனோஜ்பாண்டியன் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். பி.எச். பாண்டியன் மனைவி சிந்தியா பாண்டியன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தராக பதவி வகித்தவர். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காலமானார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close