உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு! சிசிடிவி ஆதாரங்களை வெளியிடும் ஸ்டாலின்!

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 03:10 pm
stalin-about-local-body-election

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இன்று தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முறையாகவும், உண்மையாக நடைபெறவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுங்கட்சியினர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

நீதிமன்றத்தின் உதவியுடனே தேர்தலை முறையாக நடத்தி விட்டோம். வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. திமுக வெற்றி பெற்ற இடங்களில் அறிவிப்புக்கள் மிகவும் தாமதப்படுத்தப்பட்டன. சிசிடிவி ஆதாரங்களுடன் உண்மையை பொதுமக்களுக்கு நீதிமன்றத்தின் மூலம் விரைவில் வெளிக்கொண்டு வருவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

                                              
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக 85 சதவீத இடங்களில் வெற்றி அடைந்துள்ளது.ஆனால் உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. திமுக தான் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது இதன் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தாலும் பொதுமக்கள் உண்மையை உணர்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close