ஸ்டாலின் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! 

  சாரா   | Last Modified : 06 Jan, 2020 02:51 pm
stalin-meets-dinakaran

தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் இன்று காலையில் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கான கூட்டம் தொடங்கிய நிலையில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டு பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசுவதற்கு அனுமதி அளிக்காததால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இது குறித்து நிருபர்களுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார். அடுத்து செய்தியாளர்களைச் சந்திப்பதற்காக அமமுக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் காத்திருந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்து விட்டு மு.க.ஸ்டாலின் கிளம்பிய போது எதிரே வந்த டிடிவி தினகரன், எதிர் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து புத்தாண்டு வாழ்த்தையும் தெரிவித்தார். 

முன்னதாக ஸ்டாலினும், தினகரனும் தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கி அறிக்கைகளும், பேட்டிகளும் கொடுத்து வந்த நிலையில், இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அரசியலில் நாகரிகமும், கண்ணியமும் இன்னமும் தமிழகத்தில் இருப்பதை இந்த சந்திப்பு எடுத்துக் காட்டுவதாகவே அனைவரும் பார்க்கிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close