தமிழக பாஜக தலைவர் பதவி... தமிழிசைக்கு நீங்கியது தலைவலி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 29 Jun, 2018 01:05 pm
tamil-nadu-bjp-leader-will-continue-to-tamilisai

பாஜக தலைமை தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜனே நீடிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதரராவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவராக தமிழசை சவுந்திரராஜன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட காலம் முதல் அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆர்.கே நகரில் நடைபெற்ற தேர்தலில் நோட்டாவை  விட பா.ஜ.க மிக குறைந்த வாக்குகளையே பெற்றது.  இதற்கு பொறுபேற்று தமிழிசை  தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மீண்டும் அவரது கட்சிக்காகரர்களே கூச்சலிட்டனர். 

இதைத் தொடர்ந்து டெல்லிக்கு சென்ற தமிழிசை, மாநிலத்தில் உள்ள மூத்த தலைவர்கள் எனக்கு ஒத்துழைப்பு நல்கவில்லை என்றும், ஆர்.கே நகர் தேர்தல் பிரசாரத்துக்கு என்னுடன் யாரும் வரவில்லை என்றும் தமிழிசை விளக்கம் அளித்தார். 

தமிழகத்தில் நடைபெறும் ஒரு விஷயத்துக்கு தமிழிசை ஆதரவு தெரிவித்தால், அதை பொன்னார் எதிர்ப்பார், பொன்னார் ஆதரித்தால் அதை தமிழிசை எதிர்ப்பார். இந்த நெருப்பு புகைக்காமல் சிறிது காலம் ஓய்ந்திருந்த நிலையில், தமிழிசையை நீக்க வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பொதுச் செயலாளர் முரளிதரராவ் அறிக்கை அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், பாஜக தலைமை தாமாக முன்வந்து இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார். அவர் மாற்றப்படவுள்ளதாக கூறும் செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. உண்மைக்கு புறம்பானவை, உள்நோக்கம் கொண்டவை’’ எனத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாஜக தமிழக தலைவராக தமிழிசை நீக்கப்படவுள்ளதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close