ஹார்மோன் ஊசி... வலி, வேதனை! இறுதியில் வன்கொடுமை!!

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 03:59 am
girl-children-kidnapped-and-sexually-abusive

‘குழந்தை கடத்தல்’அண்மையில் வாட்ஸ் அப்பில் வருகின்ற ஃபார்வேடு மெசெஜ் உண்மையாக நிகழ்ந்த தருணம். கடந்த சில நாட்களாக தெருவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை காணவில்லை. பள்ளி சென்ற குழந்தையை காணவில்லை, குழந்தை கடத்துவதற்காகவே வட நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சில நூதன கடத்தல்காரர்கள் இப்படி பல செய்திகள் வெளிவந்தது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தின.

சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும், கிராமங்களிலும் கூட இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளன. இப்படி வடமாநில கொள்ளையர்களால் கடத்தப்படும் குழந்தைகளில் பெரும்பாலோனோர் சிறுமிகள் என கணக்கெடுப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. கிட்னியை திருடவோ, உடல் உறுப்புகளுக்காகவோ சிறுமிகள் கடத்தப்படவில்லை என்பதில் விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தையை பிச்சை எடுக்கவைப்பது, குழந்தையை விற்பது இதெல்லாம் பழைய காலம். பெண் குழந்தைகளை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகள் முதிர்ச்சியடைய ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டு கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பாலியல் தொழிலுக்காக செயற்கை முறையில் முதிர்ச்சியடை செய்யும் கொடுமைகள் நேபாள நாட்டு எல்லையில் அரங்கேறி வருகின்றன. இப்படி நேபாள எல்லையில் இருந்து தப்பிவந்த 8 வயது சிறுமி ஒருவர் அளித்த வாக்குமூலத்தில், “என்னை கடத்திச்சென்றவர்கள் சாப்பாடு தருகிறார்களோ இல்லையோ தினமும் இரண்டு முறை சிவப்பு நிறத்தில் மருந்து கொடுப்பார், அதை சாப்பிட்டவுடன் எனக்கு வாந்தி வரும். அதை சாப்பிட மாட்டேன் என அழுவேன். ஆனால் என்னை அடித்து கட்டாயப்படுத்தி இந்த மருந்தை சாப்பிட்டால் விரைவில் பெரிய பெண்ணாக வளர்ந்துவிடலாம் அப்போதுதான் வீட்டிற்கு செல்ல முடியும் எனக்கூறி வாயில் ஊற்றிவிடுவார்கள்” என தெரிவித்துள்ளார். 

சிறுமிகள் கடத்தப்படுவது ஒருபுறம் வேதனை என்றால் அதைவிடக்கொடுமை ஹார்மோன் ஊசி, மருந்துகள் கொடுத்து கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவது கொடுமையிலும் கொடுமை! சிறுமிகளை குறிவைத்து கடத்தும் கடத்தல் கும்பல், சிறுமிகளின் உடலில் செலுத்தும் ஹார்மோன் ஊசி மற்றும் மருந்துகளால் 9 வயது சிறுமி 16 வயதுடைய பெண்ணின் வளர்ச்சியை அடைகிறார் என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது கடத்தப்படும் 9 முதல் 12 வயது வரை உள்ள சிறுமிகளுக்கு மட்டுமே இத்தகைய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மருந்துகளை எடுத்துக்கொண்ட 2 மாதங்களில் அந்த சிறுமியின் மார்பு பெரிதாகி, உடல் பருமனும் அதிகரிக்கிறது. ஆனால் சிறுமியின் குரல் மட்டும் எந்த மாற்றமும் அடையவில்லை. 9 வயது சிறுமி அசதாரண வளர்ச்சியினால் 16 வயது இளம்பெண்ணாக உருமாறுகிறார். 

இப்படி வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் எதிர்காலம் இறப்பிலே முடிகிறது. 9 வயது சிறுமிக்கு ஹார்மோன் மருந்துகள் கொடுக்கப்படுவதால் எழும்பு பாதிப்புகள் ஏற்படும் என்றும், நரம்பு தளர்ச்சி, கருப்பபை பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றன. சில சிறுமிகள் பக்கவிளைவுகளையும், வலிகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல் இறப்புக்கு தள்ளப்படுகின்றன.   

சினிமாவில் வருவதுபோன்று சிறுமிகளை கடத்தி அறையினுள் அடைத்துவைத்து அதனை பாலியல் தொழில் செய்யும் கும்பலுக்கு விற்பனை செய்து கொண்டாடுகிறது ஒரு கொடூர கும்பல். இதனால் இந்திய-நேபாள எல்லையில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். எல்லைப்பகுதியில் பல சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நேபாள போலீசாரின் புள்ளிவிவரப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் கடத்தல் புகார்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளது. புகார் கொடுத்தவர்களில் 80 சதவிகிதம் பெண்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

பெண்களுக்கு கருத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் கொடுத்தது எல்லாம் போது முதலில் தேசத்தில் வாழ சுதந்திரம் கொடுங்கள்... 

தொடரும்... 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close