‘தாய் பால்’ தாயின் கடமையும் குழந்தையின் உரிமையும்! 

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Aug, 2018 05:16 am
worldbreastfeedingweek-treanding-in-twitter

10 மாதங்கள் தாயின் கருவறை சூட்டிலிருந்து வெளியில் வரும் குழந்தைக்கு முதலில் அமிர்தமாக தாகம் தீர்ப்பது தாய்ப்பால்.தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், உன்னதத்தையும் வலியுறுத்தும் வகையில் தாய்ப்பால் வாரம் ஆண்டுதோறும்  ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தாய்ப்பால் வார கருப்பொருளாக ’ தாய்பால் - வாழ்க்கையின் அடித்தளம் ‘ என்பதே! 

தாய்ப்பாலின் மகத்துவம்

இந்தியாவில் தாய்ப்பால் ஊட்டுவதில் பின்தங்கிய மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து ராஜஸ்தான், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் உள்ளன. குழந்தையின் முதல் உணவான தாய்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது. குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்குள் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுப்பதால் 22 சதவீத பிரசவத்துக்கு பிந்தைய இறப்புகள் தடுக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தாய்ப்பால் என்பது பிறந்த குழந்தைகளுக்கான முதல் தன்னிகரற்ற தடுப்பு மருந்தாகும்குழந்தைகளுக்கு தன்னிகரற்ற மருந்தாகும். தாய்ப்பாலில் மட்டுமே இருக்கும் சில முக்கிய அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும், அதிக கால்சியம் சத்து நிறைந்த தாயில் பால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். 

சுகப்பிரசவம் என்றால் குழந்தை பிறந்த அரை மணி நேரத்திலும், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறப்பு என்றால் இரண்டு மணி நேரத்திற்குள்ளும் தாய்ப்பாலை குழந்தைக்கு கொடுக்க வேண்டும். முதல் மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும், இது குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் சிறந்த மருந்தாகும். குழந்தைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தை பிறந்து முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறுகின்றனர் மருத்துவர்கள். குழந்தைக்கு தாய்ப்பால் நுண்ணறிவுத் திறனையும், அடிப்படை ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது.

தாய்பால் கொடுப்பதினால் குழந்தை பிறந்த பின் பெண்களுக்கு உடல் எடை கூடுவது தடுக்கப்படுகிறது. மேலும் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படுகிறது. 

தாய்க்கு ஏற்படும் பாதிப்பு

குழந்தைக்கு தாய்ப்பால் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு குழந்தைக்கு பாலுட்டுவதும் தாய்க்கு மிக முக்கியம், தாய்ப்பால் ஊட்டாத பெண்களுக்கு கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தாமதமான திருமணங்களும், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருப்பதும் குழந்தைகளுக்கு தாய்பால் தருவதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. 

குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு

தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி அலர்ஜி, ஜூரணக்கோளாறு அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதவிர குழந்தைக்கு ஆஸ்துமா, டைப் 2 நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.  

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் பொருட்டு பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தமிழக அரசின் சார்பில் தாய்ப்பால் அறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தாய்ப்பால் வங்கிகளை அரசு  நடைமுறைப்படுத்தியுள்ளது. தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலை சேகரித்து அவை 200 மில்லி லிட்டர் அளவுள்ள புட்டிகளில் அடைக்கப்பட்டு பதப்படுத்தும் கருவியில் பொருத்தப்பட்டு பதப்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close